குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் அரசு பள்ளி விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் அரசு பள்ளி விழாவில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளின் திறமைகளை பெற்றோர் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குழந்தைகளின் திறமைகளை பெற்றோர் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார்.

அரசு பள்ளி ஆண்டு விழா

நாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு தொடக்கப்பள்ளி விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கமலா தலைமை தாங்கினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிரியர் பணியை விட சிறந்த பணி எதுவுமில்லை. சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்கள் தான். அதுவும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணி என்பது கடவுள் கொடுத்த மிகப்பெரிய ஒரு வரம். குழந்தைகளுடன் நாம் ஒரு மணி நேரம் இருந்தாலே அனைத்து கவலைகளையும் மறந்து புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சி ஏற்படும்.

திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்

வாழ்க்கையில் பணம் முக்கியம் தான். அதைவிட நமக்கு நம் குடும்பம், குழந்தைகள் மிக, மிக முக்கியம். பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்விக்க வேண்டும். குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும்.

குழந்தைகளிடம் கடினமாக நடந்து கொள்ளக்கூடாது. பணிச்சுமை ஆயிரம் இருந்தாலும், குழந்தைகளுக்கு என நேரம் ஒதுக்கி அவர்களது ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story