சித்தர் கோவில் அருகில் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் முற்றுகை-கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை


சித்தர் கோவில் அருகில் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் முற்றுகை-கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
x

இரும்பாலை சித்தர் கோவில் அருகில் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் முற்றுகையிட்டனர். கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடுத்தனர்.

சேலம்

இரும்பாலை:

பள்ளிக்கூடத்தில் முற்றுகை

சேலம் சித்தர் கோவில் அருகே இலகுவம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 112 பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு 3 ஆசிரியர்கள் உள்ளனர். அதிலும் ஒரு ஆசிரியர் விடுமுறையில் உள்ளதாகவும், ஒரு ஆசிரியர் பயிற்சிக்கு சென்று விட்டதாகவும் தெரிகிறது. மீதமுள்ள ஒரு ஆசிரியரே 112 மாணவ- மாணவிகளுக்கும் பாடம் சொல்லி கொடுக்கிறார்.

இதனை அறிந்த பெற்றோர் நேற்று காலையில் பள்ளிக்கூடத்தில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூடுதல் ஆசிரியர்கள்

அப்போது முற்றுகையிட்டவர்கள் கூறுகையில், ஒரு ஆசிரியரே 112 மாணவர்களுக்கும் பாடம் சொல்லி கொடுப்பது இயலாத காரியம். எனவே இங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர் ஓய்வு பெற்று விட்டார். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரே, இங்கு கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். எனவே பள்ளி தலைமை ஆசிரியரையும் உடனே நியமிக்க ேவண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இதுதொடர்பாக மனு கொடுங்கள். அதனை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்றனர். அதன்பிறகு சமாதானம் அடைந்த பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story