பரிதோமா ஆலய பிரதிஷ்டை விழா


பரிதோமா ஆலய பிரதிஷ்டை விழா
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூபாலசமுத்திரத்தில் பரிதோமா ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் அடைக்கலபட்டணம் சேகரம் பூபாலசமுத்திரத்தில் பரிதோமா ஆலயம் புதிதாக கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. விழாவில் தொழிலதிபரும், நெல்லை திருமண்டல லே செயலாளருமான டி.ஜெயசிங் முன்னிலை வகித்தார். திருமண்டல பேராயர் ஆக்னஸ்.பர்னபாஸ் புதிய ஆலயத்தை பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். தொடர்ந்து ஆலய கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தின் பிரதிஷ்டை ஆராதனையை பேராயர் நடத்தினார். நற்கருணை வழங்கப்பட்டது. விழாவில் அடைக்கலபட்டணம் சேகர தலைவர் சாமுவேல் ஜோசப் நீல், சபை ஊழியர் கேப்டன் குசேலபதி மற்றும் சபைமக்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவில் அசன விருந்து வழங்கப்பட்டது. முன்னதாக ஆயலத்தின் கிறிஸ்துமஸ் கீத பவனி, சிறுமி சிறுவர்கள் கலை நிகழ்ச்சிகள், வேதாகம தேர்வு, மர விழா உள்ளிட்டவை நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக திருமண்டல பேராயர் ஆக்னஸ்.பர்ன பாசுக்கும், லே செயலாளர் டி.ஜெயசிங்க்கும் பட்டாசு வெடித்து சபை பொருளாளர் மணிமோகன்ராஜ் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை சேகர கமிட்டி உறுப்பினர்கள் தாவீது, தங்கையா, செல்வமணி, நீல் செல்வகுமார், தீபன் பாக்கியராஜ், தங்கராஜ், ஞானமணி. தங்கராஜ் ஏசுவடியன், ஜோசப் மற்றும் சபை மக்கள் செய்து இருந்தனர்.


Next Story