திருத்தங்கல் பஸ் நிலையத்தில் கனரக வாகனங்களை நிறுத்த தடை
திருத்தங்கல் பஸ் நிலையத்தில் கனரக வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடியே 70 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சில வாரங்கள் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பஸ் நிலையம் செயல்படாமல் போனது. இதுகுறித்து 'தினத்தந்தியில்' படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் திருத்தங்கல் பஸ் நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அங்கு கனரக வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் தடை விகித்தனர். வாகனங்களை நிறுத்துவதற்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு பலகையும் வைக்க ஏற்பாடு செய்து வருவதாக மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி சரவணன் தெரிவித்தார்.