விடுதிகளில் பகுதிநேர பெண் தூய்மைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


விடுதிகளில் பகுதிநேர பெண் தூய்மைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் பகுதிநேர பெண் தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர பெண் தூய்மை பணியாளர்கள் (தொகுப்பூதியம் மாதம் ரூ.3,000 மட்டும்) நேர்காணல் மூலம் இனசுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியுடைய பெண்கள் வருகிற 11-ந்தேதிக்குள்(திங்கட்கிழமை) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1-07-2022 தேதியன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் 37 வயது மிகாதவராகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் டிஎன்சி பிரிவினர் 34 வயதுக்கு மிகாதவராகவும், இதர பிரிவினர் 32 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஒட்டி அதனை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதள முகவரியில் www.mayiladuthurai.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story