காங்கயம் அருகே பச்சாபாளையம் பகுதியில் பகுதி நேர ரேஷன் ்கடையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
காங்கயம் அருகே பச்சாபாளையம் பகுதியில் பகுதி நேர ரேஷன் ்கடையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
காங்கயம்
காங்கயம் அருகே பச்சாபாளையம் பகுதியில் பகுதி நேர ரேஷன் ்கடையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
ரேஷன் கடை
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் பாப்பினி ஊராட்சி பச்சாபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் 29 புதிய ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காங்கயம் தாலுகாவில் மட்டும் 8 புதிய ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 8 லட்சத்து 15 ஆயிரத்து 484 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
வரதப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ள காங்கயம் வட்டத்தில் 2 முழு நேர ரேஷன் கடைகளும், தற்போது பச்சாபாளையம் பகுதி நேர ரேஷன் கடையுடன் சேர்த்து மொத்தம் 3 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. வரதப்பம்பாளையம் முழு நேர ரேஷன் கடைகள் 746 குடும்ப அட்டைகளில் 140 குடும்ப அட்டைகளை பிரித்தும், பாப்பினி முழு நேர ரேஷன் கடையில் 848 குடும்ப அட்டைகளில் 289 குடும்ப அட்டைகளை பிரித்து, 429 குடும்ப அட்டைகளுடன் பச்சாபாளையத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2 நாட்கள் செயல்படும்
இந்த புதிய பகுதி நேர ரேஷன் கடையானது வாரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன் மற்றும் தி.மு.க.கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.