விளைநிலங்களில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகள்
விளைநிலங்களில் ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகள்
தளி
ஆனைமலை புலிகள் காப்ப பகுதியில் விளை நிலங்களை ஆக்கிரமித்து வளரும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாமல் மலைவாழ் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
பார்த்தீனியம் செடிகள்
பார்த்தீனியம் செடிகள்.ஒரு சதுரடியில் ஒரு செடி இருந்தால் போதும் படிப்படியாக பெரும் பகுதியை ஆக்கிரமித்து விடும். அதற்கு பராமரிப்பு, உரம், தண்ணீர் வேண்டியதில்லை. மழை பெய்தவுடன் அதன் ஈரம் காய்வதற்குள் முளைத்து, பூக்கள் பூத்து பெருகி விடும் ஆற்றல் பார்த்தீனியம் செடிகளுக்கு உண்டு. அதை பூப்பூக்கும் முன்பு அளித்தால்தான் உண்டு. விளை நிலங்கள், நீர்நிலைகள் என எங்கும் பார்த்தீனியம் செடிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
வனப்பகுதியில் இயற்கையாக உள்ள சத்துக்களை உறிஞ்சி வளர்ந்து வரும் இந்த செடிகளால் பயன்இல்லை. மலைவாழ் விவசாயிக்கு சொறி, சிரங்கு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு உடல் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. அதை அழிக்கும் முறையை வனப்பகுதியில் இருந்து முழுமையாக தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். பார்த்தீனியம் செடிகளை அழிப்பதற்கு வேளாண்துறையினர் முன்வர வேண்டும்.
விழிப்புணர்வு
மேலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இல்லையென்றால் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியாது. பல்வேறு இடையூறுகளால் தொடர்ந்து வருமான இழப்பை சந்தித்து வரும் மலைவாழ் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கும், வருமான இழப்புக்கும், பெரும் தடைக்கல்லாக உள்ள இந்த செடிகளை அழிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மழைவாழ் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.