முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்


முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்
x

சென்னையில் வருகிற 11-ந் தேதி நடக்கும் முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கோதண்டபாணி மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில், திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவின்படி, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, வருகிற 11-ந் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை முற்றுகையிட்டு நடைபெறும் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்பது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்து ஜாக்டோ-ஜியோ கோரிக்கை மனுக்களை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story