மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்ற மாணவி திடீர் தற்கொலை
மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்று வந்த கல்லூரி மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி,
மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்று வந்த கல்லூரி மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜூடோ வீராங்கனை
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ். இவருடைய மகள் தங்கபாண்டியம்மாள் (வயது 18). இவர் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
ஜூடோ விளையாட்டு வீராங்கனையான இவர் மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் திருப்பூரில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் உள்ளவர்கள், போட்டிக்கு செல்லக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனவருத்தம் அடைந்த தங்கபாண்டியம்மாள், வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மாணவியின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.