கட்சி அலுவலகம், சுவர் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம், பெயரை அ.தி.மு.க. மாணவர் அணியினர் அழித்ததால் பரபரப்பு
கட்சி அலுவலகம், சுவர் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம், பெயரை அ.தி.மு.க. மாணவர் அணியினர் அழித்ததால் பரபரப்பு.
விழுப்புரம்,
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை தொடர்பாக மோதல் வலுத்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட மாணவர் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயரை நேற்று மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் தலைமையில் மாணவர் அணியினர் அழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது வேண்டும்... வேண்டும்... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத்தலைமை வேண்டும் என வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் கட்சி அலுவலகம் அருகில் விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படம் வெள்ளையடித்து அழிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story