பிளஸ்-1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி


பிளஸ்-1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
x

அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் பள்ளி பிளஸ்-1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய 165 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த பள்ளி மாணவி ஜாஸ்மின் பிரிஸ்கில்லா 595 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்த மாணவியை செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், முதன்மை முதல்வர் சீனிவாசன், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதல்வர் சுந்தரம், கல்வி ஒருங்கிணைப்பாளர் கந்தபிரசாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story