ஐபிஎல் போட்டிகளை காண பாஸ் தேவை: எஸ்.பி. வேலுமணி கோரிக்கைக்கு , உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய பதில்
ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது.தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கொடுப்பதில்லை என எனவும் , அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்
இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,
ஐபிஎல் போட்டியை நடத்துபவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா.அவரிடம் பேசி ஒரு எம்எல்ஏக்கு 5 டிக்கெட் வாங்கி குடுங்க, காசு கொடுத்து வாங்கி கொள்ள நாங்கள் தயார் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story