பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்:பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்:பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து புதன்கிழமை தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதனை வரவேற்று தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, பெண்களுக்கு அரசியல் சுதந்திரத்தை கொடுக்கும் வகையில் வேற எந்த கட்சியும் செய்யாத வகையில், பா.ஜனதா அரசு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கி இருப்பது பொன்னான விஷயம். இதன் மூலம் அதிகப்படியான பெண்கள் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பை பா.ஜனதா வழங்கி உள்ளது. இதை நாங்கள் எல்லோரும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் கொடுக்காமல் சிலருக்கு மட்டுமே உதவித் தொகை கொடுக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பல பெண்கள் இந்த திட்டத்தில் பலன் பெறவில்லை. தி.மு.க. அரசு பெண்களை ஏமாற்றி விட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை அறிவித்து உள்ளார். அனைத்து பெண்களும் பா.ஜனதா பக்கம் வாருங்கள் என்று கூறினார்.


Next Story