ஈரோடு வழியாக சென்றஎக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்


ஈரோடு வழியாக சென்றஎக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்
x

எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு

ஈரோடு வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரெயில்களில் கடத்தல்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுகிறது. குறிப்பாக ஈரோடு வழியாக ஆந்திரா வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்ம நபர்கள் அடிக்கடி கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டிகளில் கேட்பாரின்றி ஓரிடத்தில் கஞ்சா பொட்டலங்களை போட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட ெரயில் நிலையம் வந்ததும் மர்ம நபர்கள் ரெயில் பெட்டிகளில் ஏறி கஞ்சா பொட்டலங்களை எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார்கள்.

இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளிலும் ரெயில்வே போலீசார் ஏறி சோதனை செய்து வருகின்றனர்.

5 கிலோ கஞ்சா

இந்தநிலையில் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று வந்த சாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஈரோடு ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.. அப்போது முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை இருந்தது. அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி சென்றவர் யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story