ரெயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து சாவு


ரெயில் நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 11:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே உள்ள பயணிகள் காத்திருக்கும் அறையில் நேற்று காலை 7 மணி அளவில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், திண்டுக்கல் நந்தவனம்பட்டி மல்லிகை நகரை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 50) என்பதும், மதுரை செல்வதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.


Next Story