ரூ.14 லட்சத்தில் பயணிகள் நிழற்குடைகள்


ரூ.14 லட்சத்தில் பயணிகள் நிழற்குடைகள்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் அருகே ரூ.14 லட்சத்தில் பயணிகள் நிழற்குடைகள்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே சாயாவனம் பகுதியில் ஒன்றியக்குழு தலைவர் நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா வரவேற்றார். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் சுபா நெடுஞ்செழியன், தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தமிழரசன், கிராம பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம பிரமுகர் செந்தில்குமார் நன்றி கூறினார். முன்னதாக பூம்புகார் அரசினர் கலைக்கல்லூரி எதிரே சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.


Next Story