பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்க பயணிகள் கோரிக்கை
பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
சீர்காழியில் ரெயில் நிலையம் உள்ளது. சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மீனவர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் இந்த ெரயில் நிலையத்திற்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக ரயில் நிலைய வளாகத்தில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால், அந்த கழிவறை கட்டிடம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக சீர்காழி ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கழிப்பிட வசதியின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே, பூட்டிக்கிடக்கும் இந்த கழிவறையை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story