கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அவதி
கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அவதி
பாபநாசம் ரெயில் நிலையத்தில் கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்தனர்.
பாபநாசம் ரெயில் நிலையம்
பாபநாசம் ெரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும், இங்கு வரும் பயணிகளுக்கு போதிய குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட வசதி இல்லாததாலும் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்த ெரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிவறை கட்டிடம் எப்போதும் பூட்டிய நிலையில் உள்ளது.
பயணிகள் அவதி
இதனால் முதியவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சமூக விரோதிகள் சிலர் ெரயில் நிலையம் வளாகத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அப்படியே விட்டு செல்வதால் வரும் பயணிகள் முகம் சுழிக்க வைக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட ெரயில்வே நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையினர் பூட்டி கிடக்கும் கழிவறையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.