இருக்கை வசதி செய்யப்படாததால் பயணிகள் அவதி


இருக்கை வசதி செய்யப்படாததால் பயணிகள் அவதி
x

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் இருக்கை வசதி செய்யப்படாததால் பயணிகள் அவதி படுகிறார்கள்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பெங்களூரு- சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். இங்கு போதிய இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமர்ந்து உள்ளனர். மேலும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய இருக்கை வசதிகள் செய்து, குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story