பாபநாசம் ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் நின்றமயிலாடுதுறை பயணிகள் ரெயில்
பாபநாசம் அருகே ெரயிலில் பசுமாடு அடிபட்டு இறந்ததால் என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் பாபநாசம் ரெயில் நிலையத்தில் மயிலாடுதுைற பயணிகள் ரெயில் 2 மணி நேரம் நின்றது. இதனால் திருச்செந்தூர், உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக சென்றன.
பாபநாசம்;
பாபநாசம் அருகே ெரயிலில் பசுமாடு அடிபட்டு இறந்ததால் என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் பாபநாசம் ரெயில் நிலையத்தில் மயிலாடுதுைற பயணிகள் ரெயில் 2 மணி நேரம் நின்றது. இதனால் திருச்செந்தூர், உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக சென்றன.
ரெயிலில் அடிபட்டு மாடு சாவு
தஞ்ைசயில் இருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையில் இருந்து தஞ்சைக்கும் தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே 8.35 மணியளவில் வந்து கொண்டு இருந்தது.பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து அரை மீட்டர் தொலைவில் ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பசுமாடு திடீெரன தண்டவாளத்தின் குறுக்கே பாய்ந்தது. இதனால் ரெயில் என்ஜினில் சிக்கிய பசு மாடு உயிரிழந்து சிறிது தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது.
என்ஜின் பழுதானது
அப்போது பசுமாட்டின் உடல் பாகங்கள் ரெயில் என்ஜினில் சிக்கியதால் என்ஜின் பழுதடைந்து மெதுவாக நகர்ந்து பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்றது.உடனே ரெயில்வே ஊழியர்கள் என்ஜினில் சிக்கி இருந்த பசுமாட்டின் உடலை மிகுந்த சிரமத்துடன் வெளியில் எடுத்தனர்.
மாற்று என்ஜின்
இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பகோணத்தில் இருந்து மாற்று ெரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு மயிலாடுதுறை பயணிகள் ரெயில் பின்புறம் இணைக்கப்பட்டு ரெயில் பின்நோக்கி இழுக்கப்பட்டு பண்டாரவாடை ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அதே நேரத்தில் தஞ்சையில் இருந்து மேலும் ஒரு என்ஜின் வரவழைக்கப்பட்டு மயிலாடுதுறை பயணிகள் ரெயின் முன்புறம் இணைக்கப்பட்டு ரெயில் தஞ்சை நோக்கி சென்றது. இதனால் தஞ்சைக்்கு ரெயில் 2 மணி நேரத்துக்கு பின் புறப்பட்டு சென்றது.
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்
பாபநாசத்தில் ரெயில் நின்றதால் இந்த வழியாக இயக்கப்படும் திருச்செந்தூர் எகஸ்பிரஸ் ரெயில் சுந்தரபெருமாள் கோவில் ரெயில் நிலையத்திலும், உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பண்டாரவாடை ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது.இதனால் இந்த இரு ரெயில்களும் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு தஞ்சைக்கு சென்றது. இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.