பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் பயணிகள்
பஸ்சுக்காக பயணிகள் வெயிலில் காத்திருக்கின்றனர்.
அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி செல்லும் சாலையும், பைபாஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா உள்ளது. இந்த வழியாக கல்லங்குறிச்சி, செந்துறை, திட்டக்குடி, பெரம்பலூர், சேலம், சென்னை போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருந்து, அந்த வழியாக வரும் பஸ்களில் ஏறிச்செல்கின்றனர். ஆனால் அங்கு நிழற்குடை இல்லை. இதனால் கடும் வெயிலில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. ெவயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சில பயணிகள் அருகே உள்ள போக்குவரத்து போலீசாருக்கான நிழற்குடையில் ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால் அதில் 2 பேருக்கு மேல் நிற்பது சிரமம். தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பயணிகளை வெயிலின் கொடுமையில் இருந்து காக்க, தற்காலிக நிழற்குடையாக கீற்று கொட்டகை அமைத்து தர வேண்டும் என்பதே பயணிகள் கோரிக்கையாகும்.