தென் மண்டல ஹேண்ட்பால் போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதலிடம்


தென் மண்டல ஹேண்ட்பால் போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதலிடம்
x

தென் மண்டல ஹேண்ட்பால் போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி முதலிடம் பிடித்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் தென் மண்டல அளவில் மாவட்டங்களுக்கு இடையே ஹேண்ட்பால் விளையாட்டு போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 15 அணிகள் கலந்து கொண்டது.

இதில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். கல்லூரி 2-ம் இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி 3-வது இடத்தையும், நாகர்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் சந்திரகுமார், தென்காசி மாவட்ட செயலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் செய்து இருந்தார்.






Next Story