பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவியர் விடுதி


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவியர் விடுதி
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

மாணவியர் விடுதி திறப்பு

கமுதியில் நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு அரசு கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சீர்மரபினர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி மாணவிகளுக்கான கல்லூரி விடுதியை திறந்து வைத்தார்.

அதன்பின்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்ெவாரு துறையிலும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவியர் விடுதி தொடங்கப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் போதிய இடவசதி உள்ளதால் விரைவில் விடுதிக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.2,500 ேகாடி நிதி ஒதுக்கீடு

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தனி கூட்டு குடிநீர் திட்டம் வழங்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி, கரூர் மாவட்டம் தஞ்சை, புகலூர், காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து தனியாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

.மேலும் கஞ்சம்பட்டி, பரளை மற்றும் வெகுநாதன் கால்வாய் சீரமைக்க ரூ.120 கோடி ஒதுக்கீடு வழங்கி அதற்கான பணிகளும் நடக்கின்றன. நரிப்பையூரில் ரூ..120 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி பகுதிகளில் அவ்வப்போது தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, முதுகுளத்தூரில் 1500 பேர் பயன்படும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் உப்பளம் பகுதிகளில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கமுதி நகரில் 71 வயதான முருகன் என்பவர் தண்ணீர் வண்டி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வருவதை அறிந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சொந்த நிதியில் புதிதாக மாடு வாங்கி பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் சிவசுப்பிரமணியன், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கமுதி பேரூராட்சித்தலைவர் அப்துல் வஹாப் சகா ராணி, ராமசாமிபட்டி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் இன்பாரகு மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


Next Story