பசும்பொன் ஜெயந்தி முப்பெரும் விழா


பசும்பொன் ஜெயந்தி முப்பெரும் விழா
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், டி.யூ.சி.சி., தமிழ் நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவை ஆகியவை சார்பில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா, திருப்பூர் மாவட்ட முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் 4- ம் ஆண்டு விழா, மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவரும், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக செயலாளர் வி.டி.பாண்டியன் தலைமை தாங்கி திருப்பூர் புதூர் பிரிவில் உள்ள அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விழாவுக்குமுக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளரும், தமிழ்நாடு முக்குலத்தோர் பசும்பொன் தேவர் பேரவை நிறுவன தலைவர் கே.பசும்பொன் பாலு முன்னிலை வகித்தார். ஊர்வலம் புதிய பஸ் நிலையம் அருகே நிறைவு பெற்றது. விழாைவ முன்னிட்டு 10-க்கும் பத்துக்கு மேற்பட்ட பகுதிகளில் ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதி பெண்கள் குடும்ப விழாவாக ஆரத்தி எடுத்தும்,ஆண்கள் சிலம்பாட்டம் ஆடி வரவேற்றனர். பசும்பொன் தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. 1000 மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ- மாணவிகள், ஏழை எளியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் கொடுக்கப்பட்டது.

விழாவிற்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொருளாளர் மதர் லேண்ட் மணி , முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு கவுரவ தலைவர் ஜே.பி.சந்தோஷ், அவைத்தலைவர் வள்ளிக்கண்ணுத்தேவர், இணை ஒருங்கிணைப்பாளர் ராமர், தொண்டரணி இணை செயலாளர் லட்சுமணன், துணை தலைவர் டி.தர்மராஜ், துணை செயலாளர் வி.சாமிநாதன், செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், நெல்லை நவனேஷ், பூமி, செல்லத்துரை, சிட்டிசன் சிவா, சண்முகம், விஸ்வநாதன், குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story