படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திரனாக பக்தரகள் சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணமங்கலம்
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திரனாக பக்தரகள் சாமி தரிசனம் செய்தனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் நீணட வரிசையில் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் தங்கள் நேர்ச்சைக்காக அம்மன் சிலை, பரசுராமர் சிலைகளை தலையில் தூக்கி வைத்து கோவிலை வலம் வந்தனர். மேலும் சில பக்தர்கள் தங்கள் உடம்பில் வேப்பிலை அணிந்து கோவிலை வலம் வந்தனர். மாலையில் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது. ரேணுகாம்பாள் பிறப்பு வளர்ப்பு நாடகமும் நடைபெற்றது. இரவில் நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.