படவேடு கோவில் திருவிழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா

படவேடு கோவில் திருவிழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா
x

படவேடு கோவிலில் ஆடித்திருவிழாவின் 5-ம் வெள்ளியையொட்டி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா வந்ததை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

படவேடு கோவிலில் ஆடித்திருவிழாவின் 5-ம் வெள்ளியையொட்டி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா வந்ததை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி மாத 4 வெள்ளிக்கிழமைகளிலும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி இரவு வீதி உலா வந்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து ஆவணி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் ஆடித்திருவிழாவின் 5-வது வெள்ளியாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் நாதஸ்வர கச்சேரியும், இரவில் மகிஷாசூர மர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் அம்பாள் வீதி உலா நடந்தது. அப்போது கரகாட்டம், நையாண்டி மேளம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, கோவில் செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story