பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்


பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா  கந்தூரி விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி

கடையம்:

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்தூரி விழா

தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற தர்காக்களில் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கந்தூரி விழாவிற்கு வருவது வழக்கம்.

கந்தூரி விழாவையொட்டி நேற்று கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பச்சை களை ஊர்வலம், 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.

சந்தனக்கூடு ஊர்வலம்

அதைத்தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் ரவண சமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, 6-ந் தேதி அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைகிறது.

இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுவார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெறும். 8-ந் தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது ரபி, முகமது சலீம் மற்றும் பள்ளிவாசல் மேலாண்மை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story