பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா


பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவையொட்டி தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறப்பும், காலை 9 மணிக்கு காலை பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு

சிறப்பு பூஜையும், மாலை 6 மணிக்கு கோவில் முன்பு பொன்னம்பல நாடார் கலையரங்கில் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் முன்பு கலை நிகழ்ச்சிகளும்

நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் 9-ம் நாள் விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாரதனையும், மாலை 5 மணிக்கு மாவிளக்கு ஏந்தி பெண்கள் ஊர்வலமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து பூச்சட்டிகள், 21 அக்கினி சட்டி, 54 அக்கினிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு வண்ண ஊர்தியில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில், வெள்ளிக் குடையின் கீழ் வீற்றிருந்து, தங்க குடம் வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் திருக்கோளத்துடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகப்படி தாரர்கள் சார்பில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று காலையில் பொங்க லிடுதல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன், மேளதாளத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு கோவில் முன்பு பொன்னம்பலநாடார் கலையரங்கில் மேலக்கரந்தை சந்தனசெல்வி- நாகலட்சுமி குழுவினர் வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 1,008திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.


Next Story