மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி திடீர் தற்கொலை


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி திடீர் தற்கொலை
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்ெகாலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்ெகாலை செய்து கொண்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னபூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து(வயது 52). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் எலும்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3-வது தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். மேலும் அவருடைய மனைவி உடன் இருந்து கவனித்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக மணிமுத்துவின் மனைவி வெளியே சென்று விட்டார். அப்போது, ஆஸ்பத்திரியின் கழிவறைக்கு சென்ற மணிமுத்து அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்று விட்டு மீண்டும் வந்த அவரின் மனைவி, நீண்ட நேரமாகியும் கழிவறைக்கு சென்ற கணவர் வராததை கண்டு அங்கு சென்று பார்த்தபோது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நோய் குணமாகாத விரக்தியில் அவர் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஆஸ்பத்திரியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

உயிரிழந்த மணிமுத்து ஒரு கோவிலில் பந்தல் கட்டும் பணியில் ஈடுபட்டபோது, தவறி விழுந்ததில் கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருப்பதால், குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story