தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி


தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி
x

தண்ணீர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ சேவையை தொடங்கியுள்ளது. 6 தளங்கள் கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகளிலும் தண்ணீர் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடியாக இந்த ஆஸ்பத்திரியில் குடிநீர் மற்றும் கழிப்பறையில் தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story