பத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா
புதுக்கோட்டை பத்திரகாளி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடி
சாயர்புரம்:
புதுக்கோட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன், முத்துமாலை அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, 108 சங்காபிஷேகம், யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கருப்பசாமி, பத்திரகாளிமுத்து, ஆத்திப்பழம், முருகேசன், அமிர்தலிங்கம் மற்றும் அய்யப்ப பட்டர், ஆறுமுகநாத பட்டர் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story