பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
பிச்சிவிளை பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
பிச்சிவிளை வடக்கு தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்து அன்னையர் முன்னணி தலைவி செல்வக்குமாரி முன்னிலையில், மக்கள் எல்லா நலங்களும் பெற்று நலமுடன் வாழ வேண்டும், கனமழை பொழிய வேண்டும், வறுமை நீங்கி நாடு செழிக்கவும் வேண்டி பாடல்கள் பாடி பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். இதில் இந்து அன்னையர் முன்னணி பொதுச்செயலாளர் அமுதா, செயலாளர் அன்னம்மாள், துணைத் தலைவி கோகிலா, இந்து சமய பண்பாட்டு வகுப்பு ஆசிரியை வினிதா மற்றும் பொறுப்பாளர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story