தமிழக கடலோர பகுதிகளில் தேசிய கொடியுடன் ரோந்து
தமிழக கடலோர பகுதிகளில் தேசிய கொடியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி
சுதந்திரதின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி சுங்கத்துறை அலுவலகத்துக்குட்பட்ட ராமேசுவரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், மண்டபம் உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படையினருடன் இணைந்து படகில் தேசிய கொடியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேசிய கொடிக்கு மரியாதையும் செலுத்தினர். இது குறித்த சிறப்பு வீடியோவை திருச்சி சுங்கத்துறை (தடுப்பு பிரிவு) முதன்மை ஆணையர் டாக்டர் உமாசங்கர் நேற்று வெளியிட்டார்.
Related Tags :
Next Story