அய்யனார்கோவில் புரவி எடுப்பு விழா
முதுகுளத்தூர் அருகே அய்யனார்கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர் அருகே மேலசாக்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு முதுகுளத்தூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார், பேச்சியம்மன், கருப்பசாமி, மாரியம்மன், தவழும் பிள்ளை உருவங்களை வடிவமைத்து மேளதாளங்கள், வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக மேல சாக்குளம் கிராமத்தை சென்றடைந்தனர். அங்கு சிறப்பு பூஜை நடந்தது.. திருவிழாவையொட்டி பேச்சியம்மன் அய்யனார் கோவில் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து அய்யனார் பரிவார காவல் தெய்வங்களுக்கு அலங்காரம் செய்து கண் திறந்து சிறப்பு பூஜை வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story