பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணி இடைநீக்கம்


பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய  கிராம நிர்வாக அதிகாரி பணி இடைநீக்கம்
x

பணி இடைநீக்கம்

ஈரோடு

நம்பியூர் அருகே பட்டா மாறுதல் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கிராம நிர்வாக அதிகாரி

நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் தனது அரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதுபற்றி கார்த்திக் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ஆலோசனைப்படி கார்த்திக் கொட்டக்காட்டு்ப்பாளையத்தில் உள்ள லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.

பணி இடைநீக்கம்

பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரசாத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண் பிரசாத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அருண்பிரசாத் மீது கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story