ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.88 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை


ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.88 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை
x

ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.88 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட இருப்பதாக தலைவர் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரேணுகாதேவி பெருமாள் ராஜா, செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக இளநிலை உதவியாளர் மதன் தீர்மானங்களை வாசிததார்.

கூட்டத்தில் பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மெல்ல மெல்ல நீர்மட்டம் குறைந்து வருவதால் தேவையான பைப்புகள் கேபிள் ஒயர் மற்றும் உதிரி பாகங்களை பொருத்தி குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும். 3-வது வார்டு பகுதியில் சுமார் 150 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வருகிறார். அந்த இடத்தை அளவீடு செய்து வருவாய்த்துறையினர் நத்தமாக மறு வரை செய்து அந்த இடத்தை அண்ணாநகர் பகுதி மக்களுக்கு வீட்டுமனையாக வழங்க வேண்டும். 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க மின் மோட்டார் பொருத்த வேண்டும். பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளதால் புதிதாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.88 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்திருப்பதாக தலைவர் தெரிவித்தார்.


Next Story