பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு


பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
x

நீடாமங்கலம் அருகே பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக புனிதநீர் கலசங்கள் யாகத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவில், நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.



Next Story