ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்
நாகர்கோவில்,
குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க தலைவர் ஆல்பன், குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நிர்வாகிகள் மரிய ஜேம்ஸ், அனீஸ் ஆகியோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் 1,500 நிரந்தர பணியாளர்களும், 900 தற்காலிக பணியாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட ஊதிய உயர்வு ரூ.40-ஐ உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரப்பர் மரங்களை வெட்ட கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.