பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினத்தன்று காமராஜருக்கு மரியாதை செலுத்த வேண்டும்


பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினத்தன்று காமராஜருக்கு மரியாதை செலுத்த வேண்டும்
x

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட தினத்தன்று காமராஜருக்கு மரியாதை செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கும் கேரளாவில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டத்திற்கும் ஆழியாறு-பரம்பிக்குளம் திட்டம் பெரும் பயன் தருகிறது.

இந்த அணை காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் என அறிவித்த நாளான 7.10.1961-ஐ அடிப்படையாக கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் 7-ந் தேதி இத்திட்டத்தை செயல்படுத்த முக்கிய காரணமாக இருந்த தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்து வருவது சிறப்புக்குரியது.

அந்தவகையில் இந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.கே.பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், பத்மபூஷன் டாக்டர் கே.எல்.ராவ் ஆகியோரது உருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்திற்காக அடித்தளமாக செயல்பட்ட காமராஜரின் பெயரை அழைப்பிதழில் அச்சிட்டு மரியாதை செய்திருக்க வேண்டும். அழைப்பிதழில் காமராஜரின் பெயர் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்ட தினத்தன்று காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக காமராஜர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story