கடந்த மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டும்
குறுக்குச்சாலை கே. சண்முகபுரம், சிந்தலக்கட்டை, சுப்பிரமணியபுரம் பகுதி மின்நுகர்வோர்கள் கடந்த மாத மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர்ப்புற மின்பகிர்மான அலுவலகத்துக்கு உட்பட்ட குறுக்குச்சாலை கே. சண்முகபுரம், சிந்தலக்கட்டை, சுப்பிரமணியபுரம் ஆகிய மின் பகிர்மானங்களுக்கு தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின்சாரம் கணக்கிட்டுப் பணி மேற்கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது. இதனால் கடந்த 05/2022 மாதாந்திரத்தில் தாங்கள் செலுத்திய மின்கட்டணத்தையே தற்போதைய 07/2022 மாதாந்திர மின் கட்டணமாக செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர்களுக்கு எதிர்வரும் கணக்கீட்டில் மின் பயன்பாட்டின்படி உரிய கட்டணம் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story