புத்தகங்களுக்காக கொடுக்கும் தொகை செலவல்ல, மிகச்சிறந்த மூலதனம்
புத்தகங்களுக்காக கொடுக்கும் தொகை செலவல்ல, மிகச்சிறந்த மூலதனம்
புத்தகங்களுக்காக கொடுக்கும் தொகை செலவல்ல, மிகச்சிறந்த மூலதனம் என்று நாகையில் நடந்த புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அமைச்சர் ரகுபதி பேசினார்.
2-ம் ஆண்டு புத்தக திருவிழா
நாகை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2-ம் ஆண்டு புத்தக திருவிழா தொடங்கியது. விழாவினை அமைச்சர் ரகுபதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், செல்வராஜ் எம்.பி., தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைத்தனர். தொடர்ந்து அமைச்சர் ரகுபதி விழாவில் இடம் பெற்றுள்ள புத்தக ஸ்டால்களை வரிசையாக பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
செலவு அல்ல மூலதனம்
பல நூல்களைப்படிப்பதன் மூலம் உயர்ந்த அறிவையும், சிறந்த அனுபவத்தையும் நாம் பெற முடியும். புத்தகங்களுக்காக கொடுக்கும் தொகை செலவல்ல. மிகச்சிறந்த மூலதனம். நல்ல புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மிகச்சிறந்த ஆளுமை மிக்க மனிதராக நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் பதக்கங்களை அமைச்சர் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) முத்துகுமாரசாமி, நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.