சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர், காயாமொழியில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர், காயாமொழியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள்

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அருணகிரி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள் சுடலை, நகர துணை செயலாளர் மகாராஜன், மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வேல் ராமகிருஷ்ணன், கோமதிநாயகம், வின்ஸ்டன், ராஜேஷ், ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடார் வியாபாரிகள் சங்கம்

திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் காமராசு நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின், துணை தலைவர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ராமகிருஷ்ணன், தங்ககுமார், வெங்கடேஷ், கோடீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை செயலாளர் விடுதலைச்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மண்டல செயலாளர் தமிழினியன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் கன்னிமுத்து, சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் மற்றும் சந்திரன், விஜயன், முத்துகிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காயாமொழி

இதேபோல் காயாமொழியில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தி.மு.க. சார்பில் உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், உடன்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராஜதுரை, பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் குமார், தோட்டத்தார்விளை கிளை செயலாளர் ரவி, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயாமொழி உள்ள சிலைக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகளிரணி மாவட்ட துணை அமைப்பாளர் தனலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம், முத்துமாணிக்கம், ராஜதுரை, லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்மக்கள்

காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஊர் தலைவரும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராகவ ஆதித்தன் வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், முருகன் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், ராஜன் ஆதித்தன், குமரேச ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், தனிகேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், கோகுலே ஆதித்தன், ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணி

இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து முன்னணி ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க மாநில துணை பொது செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவபால், காயாமொழி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் (பொறுப்பு) அப்பாத்துரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் தலைவர் சீனிவாசன் நாடார் தலைமையில், துணை தலைவர் பார்த்தசாரதி, துணை செயலாளர் கோயம்பேடு சுரேஷ்நாடார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கழகத்தினர்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

விழாவில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ், மாவட்ட பிரதிநிதி பழனிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி, ஆத்தூர் நகர துணைச் செயலாளர் பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சுந்தர், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜெயசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story