மது குடிக்க பணம் தரமறுத்ததாயை தாக்கிய மகன் கைது


தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் மது குடிக்க பணம் தரமறுத்த தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவருடைய மகன் பெரிய மாரீஷ் (வயது 23). இவர் மது குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்டாராம். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டாராம். இதில் ஆத்திரம் அடைந்த பெரிய மாரீஷ் இரும்பு கம்பியால் மஞ்சுளாவை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மஞ்சுளா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பெரிய மாரீசை கைது செய்தனர்.


Next Story