உழவர் மன்றத்தினர் போராட்டம் அறிவிப்புஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சமாதானக்கூட்டம்


உழவர் மன்றத்தினர் போராட்டம் அறிவிப்புஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சமாதானக்கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடந்தது.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்:

கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் அந்தந்த கிராமத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும், தாலுகா அலுவலகத்தில் மக்கள் சாசனத்தின் அடிப்படையில் அனைத்து பணிகளும் நடைபெற வேண்டும், பொது மக்களால் கொடுக்கப்படும் மனுக்களுக்கு அரசாணை 99-ன் படி உரிய ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும், மனு மீது உரிய காலத்திற்குள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்காத பொது தகவல் அலுவலர் மீது நன்னடத்தை விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாணைகள், சட்டங்கள், வருவாய்த்துறை நிலை ஆணைகள் ஆகிய எவ்வித உத்தரவுகளையும் மதிக்காத தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த உழவர் மன்றத்தினர் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதையறிந்த தாசில்தார் வெற்றிவேல் உழவர் மன்றத்தினரை தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தார் வெற்றிவேல் உழவர் மன்றத்தினரிடம் உங்களது கோரிக்கைகள் அனைத்துக்கும் உரிய தீர்வு காணப்படும் என கூறினார். இதையடுத்து உழவர் மன்றத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறிச் சென்றனர். இந்த சமாதான கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் சிவகண்டன், ஸ்ரீமுஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், குணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் குமார், கிராம உதவியாளர் ஜெயஸ்ரீ ரமேஷ், உழவர் மன்ற தலைவர்கள் குணமங்கலம் ரமேஷ், சாத்தாவட்டம் ராமலிங்கம், அக்ரஹாரம் சங்கர், கலியங்குப்பம் பூராசாமி, மதகளிர்மாணிக்கம் ஜான்சன், ஸ்ரீநெடுஞ்சேரி ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Next Story