ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் தாலுகா அக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் நாரைக்கிணறு செல்லும் சாலையில் கிழக்குப்பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக புளியம்பட்டி மற்றும் ஒட்டுடன்பட்டி கிராம மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
பின்னர் தாசில்தார் சுரேஷ் கூறுகையில், பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் இருதரப்பினரும் கோவிலில் வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கோவிலை நிர்வகிப்பதில் பிரச்சினை உள்ளதால், கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர இருதரப்பினரும் ஒப்புக்கொண்டு இருப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின், வருவாய் ஆய்வாளர் ஜான்சி சேவியர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் பெருமாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.