சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்


சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

ேகாவில் பிரச்சினை தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் உள்ள கோவில் பிரச்சினை தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் நிலத்தில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, கிராம மக்களை பூஜை செய்ய விடாமல் தடுத்து வருவதாக கூறி, இது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவகத்தில் நடந்தது. தாசில்தார் ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாயகம் மற்றும் இரு தரப்பினர் கலந்து கொண்டனர். அப்போது, கிராம மக்கள் தரப்பினர் இந்த கோவிலில் 3 தலைமுறைகளாக வழிபட்டு வருவதாக கூறினர். மற்றொரு தரப்பை சேர்ந்த ஒருவர், தானே கோவிலை கட்டியதாகவும், எனவே கோவில் சாவியை யாரிடமும் தர முடியாது எனவும் கூறினார்.

இதையடுத்து, இந்த கோவில் அரசு புறம்போக்கில் உள்ளதால் ஊர் மக்கள் வழிபடுவதை தனிநபர் தடுக்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது. எனவே, ஊர் மக்கள் வழக்கம் போல கோவிலில் வழிபாடு செய்யலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


Next Story