கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்


கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
x

கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை சரகம் மற்றும் கபிஸ்தலம் சரகத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களான வீரமாங்குடி, சருக்கை, வாழ்க்கை, சத்தியமங்கலம் அருகே நீர் சேகரிப்பு கிணறு அமைத்தல். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாகை நகராட்சி, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பாக கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, கும்பகோணம் உதவி நிர்வாக பொறியாளர் கிராம குடிநீர் திட்ட உபகோட்டம், உதவி நிர்வாக பொறியாளர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பேராவூரணி, நீர்வளத்துறையினர், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வாழ்க்கை, தூத்தூர் கிராமங்களுக்கு இடையே தடுப்பணைகள் அமைத்து கொடுத்தால் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடர எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story