ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்


ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
x

பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் ரேஷன் கடை அமைப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை அமைக்கக்கோரி கிராம மக்கள் கடந்த 9-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதை தொடர்ந்து கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது உள்ள ரேஷன் கடையை இரண்டாக பிரித்து ஊராட்சி மன்ற தீர்மானம் படி அரசு புறம்போக்கு இடத்தில் நிரந்தர ரேஷன் கடையும், மற்றொரு தரப்பினருக்கு பகுதி நேர ரேஷன் கடையையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தெரிவித்தார்.


Next Story