கோபி அருகே வாகனம் மோதி மயில் சாவு


கோபி அருகே வாகனம் மோதி மயில் சாவு
x

கோபி அருகே வாகனம் மோதி மயில் சாவு

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள முருகன்புதூரில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் இரை தேடி அடிக்கடி மயில்கள் பறந்து செல்லும். இந்தநிலையில் முருகன்புதூரில் செல்லும் அந்தியூர் ரோட்டு ஓரம் உடலில் காயங்களுடன் ஒரு மயில் செத்துக்கிடந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் அங்கு சென்று மயிலின் உடலை மீட்டு அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றார்கள். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'மயில் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோதி இறந்துள்ளது. அதை எடுத்து ரோட்டு ஓரம் வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்' என்றார்கள்.


Next Story