வாகனம் மோதி மயில் பலி


வாகனம் மோதி மயில் பலி
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே வாகனம் மோதி மயில் ஒன்று பலியானது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் பேசும் பழனியாண்டவர் கோவில் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நேற்று மயில் ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் இறந்த மயிலின் உடலை மீட்டு அய்யலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மயிலின் உடலை கால்நடை மருத்துவர் ராஜ்குமார் பரிசோதனை செய்தார். அதில் சுமார் 2 வயது உடைய பெண் மயில் என்பதும், சாலையை கடந்தபோது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி உயிரிழந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இறந்த மயிலின் உடல் அய்யலூர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.


Related Tags :
Next Story